Contact Us

Name

Email *

Message *

2019 நடைபெற்ற நிகழ்வுகள்

2019 நடைபெற்ற நிகழ்வுகள்


2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்.

2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையின் வணிகத் தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறித்தவக் கோவில்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் நிகழ்ந்தன. 39 வெளிநாட்டவர்கள்,3 காவல்துறையினர் உட்படக் குறைந்தது 253 பேர் வரை கொல்லப்பட்டனர், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

பாலகோட் வான் தாக்குதல், 2019

பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஸ்-இ-முகமது இயக்கத் தீவிரவாதிகளால், புல்வாமா தாக்குதலில், 14 பிப்ரவரி 2019 அன்று 40 மத்திய சேமக் காவல் படையினர் உயிர் நீத்தனர். எனவே பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு, இந்தியா மீது அடிக்கடி தாக்குதல் நடத்தும் தீவிரவாத இயக்க முகாம்களை அழிக்கும் நோக்கத்துடன், 26 பிப்ரவரி 2019 அன்று அதிகாலை 3.30 மணி அளவில் இந்திய விமானப் படையின் 12 மிராஜ் 2000 போர் விமானங்கள், காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டைத் தாண்டி, கைபர் பக்துன்வா மாகாணத்தின் பாலகோட் மற்றும் முசாஃபராபாத் நகரங்களில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகள் வீசித் தாக்கி அழித்தனர்.

இந்தியப் பொதுத் தேர்தல், 2019

2019 இந்தியப் பொதுத் தேர்தல் பதினேழாவது மக்களவைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 2019 ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடத்தப்பட்டது. மே 23 இல் வாக்குகள் எண்ணப்பட்டு, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.ஏறத்தாழ 900 மில்லியன் இந்தியக் குடிமக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். இத்தேர்தலில் 67% இற்கும் அதிகமானோர் வாக்களித்தனர். இத்தேர்தலிலேயே இந்தியத் தேர்தல் வரலாற்றில் மிக அதிகமானோர் வாக்களித்தனர். அத்துடன் மிக அதிகமான பெண்கள் இத்தேர்தலிலேயே வாக்களித்திருந்தனர்.

2019 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

 2019 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம்  என்பது ஐசிசி நடத்திய 12-வது துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டி ஆகும். 2019 மே 30 முதல் யூலை 14 வரை நடைபெற்ற இப்போட்டிகளை இங்கிலாந்தும் வேல்சும் இணைந்து நடத்தின. july  14 இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இலார்ட்சில் நடைபெற்ற இறுதிப்போட்டியின் ஆட்டமும் சிறப்பு நிறைவும் சமனில் முடிந்ததைத் தொடர்ந்து கூடுதலான நான்குகள் அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதன்முறையாக உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019  இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மறுசீரமைக்க வகை செய்யும் சட்ட முன்வடிவத்தை, இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா 5 ஆகஸ்டு 2019 (திங்கட்கிழமை) அன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைத்தார்.

2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி

2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி  2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்க இங்கிலாந்தின் லண்டன் நகரத்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியாகும். இது நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதன்முறையாக உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.


எத்தியோப்பியன் ஏர்லைன்சு வானூர்தி 302

 2019 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் நடந்த வான் விபத்து ஆகும். எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் 302 (போயிங் - 737 இரக விமானம்) எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா நாட்டின் தலைநகரான நைரோபி நோக்கி சென்ற போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 149 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களுமாக 157 பேர் உயிரிழந்துள்ளனர்.

டம்போ (2019 திரைப்படம்)

டம்போ (Dumbo) என்பது 2019ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு கற்பனைத் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை இயக்குனர் டிம் புர்டன் இயக்க, எஹ்ரன் க்ரூகர் என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார். 1941ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட டம்போ என்ற திரைப்படத்தை 78 ஆண்டுகளுக்கு பிறகு மறு தயாரிப்பு செய்து மார்ச்சு 29, 2019 அன்று உலகம் முழுவதும் வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தில் வெளியானது.

2019 ஆசியத் தடகளப் போட்டிகள்

23 ஆவது முறையாக நடைபெறுகின்ற ஆசிய தடகள போட்டிகளைக் குறிக்கின்றது. இப்போட்டிகள் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 24 வரை கத்தார், தோகா நகரில் நடைபெற்றன. இப்போட்டியில் 18 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,400 வீரர்கள் பங்கேற்றனர். இருபத்து மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 21 வகையான விளையாட்டுகள் போட்டிக்காக இடம்பெற்றன.

2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை

ஐசிசி நடத்தும் தேர்வுத் துடுப்பாட்ட வாகைத் தொடர் ஆகும். இது ஆகத்து 2019 தொடங்கி சூன் 2021 வரை நடைபெறும். இதுவே தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் முதல் தொடர் ஆகும்.

இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் 2019

இலங்கைத் துடுப்பாட்ட அணி 2019 பெப்ரவரி, மார்ச் மாதங்களில் தென்னாப்பிரிக்காவில் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் (ஒநாப) போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் விளையாடுகின்றது.

2019 பெப்ரவரியில், தினேஸ் சந்திமல் இலங்கை அணியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு திமுத் கருணாரத்ன தேர்வுத் துடுப்பாட்ட அணிக்குத் தலைமை தாங்க நியமிக்கப்பட்டார். தேர்வுத் தொடரை இலங்கை அணி 2–0 என்ற கணக்கில் வென்று,[5] தென்னாப்பிரிக்காவில் தேர்வுத் தொடர் ஒன்றை வென்ற முதலாவது ஆசிய அணி என்ற சாதனையைப் பெற்றது.

பிக் பாஸ் தமிழ் 3

பிக் பாஸ் தமிழ் 3 என்பது தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழின் மூன்றாவது பருவம் ஆகும், இது 16 போட்டியாளர்களுடன் 23 சூன் 2019 அன்று தொடங்கியது. இந்த மூன்றாவது பருவத்துக்கும் கமல்ஹாசனே தொகுப்புரை ஆற்றி நடத்துகிறார்.  இந்த நிகழ்ச்சியானது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாத உள்ளடக்கத்தையும் ஹாட்ஸ்டார் வழங்குகிறது. இந்த மூன்றாம் பருவமானது 16 வசிப்பாளர்கள் கலந்து கொள்ளக்கூடியதாகவும், 90 ஒளிப்படமிகள் கொண்டதாகவும் உள்ளது. 


சந்திரயான்-2

 சந்திரயான்-1 இற்குப் பின்னர் நிலாவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது விண்கலம் ஆகும்.இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (இசுரோ) வடிவமைக்கப்பட்ட இவ்விண்கலம்,
ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து 2019 சூலை 22 அன்று நிலாவை நோக்கி ஜி. எஸ். எல். வி மார்க் III ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது. இவ்விண்கலத்தில் நிலா சுற்றுக்கலன், தரையிறங்கி, தரையுலவி (ஆய்வுக் கலன்) ஆகியன உள்ளடங்கியுள்ளன. இவை அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டன.


தாய்லாந்து பொதுத் தேர்தல், 2019

தாய்லாந்து பொதுத்தேர்தல், 2019 என்பது தாய்லாந்து நாட்டில் 2014ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதன் மூலம் பிரயுத் சென்-ஓ-ச்சா பிரதமராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக நடைபெற்ற தேர்தலாகும். 2017ஆம் ஆண்டு இராணுவத்தால் உருவாக்கபப்ட்ட புதிய அரசியலைமைப்பு சட்டத்தின் படி இத்தேர்தல் நடைபெற்றது. இதன்மூலம் பிரதிநிதகள் அவையில் உள்ள 500 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

2019 இல் தமிழ்த் தொலைக்காட்சி

2019 இல் தமிழ்த் தொலைக்காட்சி என்பது 2019ஆம் ஆண்டில் தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள், பண்டிகை நாட்களில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படங்கள், முடிவடைந்த தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றின் தொகுப்பு.


தேசிய தவ்கீத் ஜமாத்

தேசிய தவ்கீத் ஜமாத் (National Thowheeth Jama'ath NTJ; அரபு மொழி: جماعة التوحيد الوطنية, "தேசிய ஓரிறைவாத அமைப்பு") என்பது இலங்கையைச் சேர்ந்த ஒரு அடிப்படைவாத, இசுலாமிய ஜிகாதியக் குழுவாகும். இக்குழுவே இலங்கையில் 2019 ஏப்ரல் 21 அன்று உயிர்ப்பு ஞாயிறுத் தற்கொலைக் குண்டுவெடிப்புகளை நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது.இவ்வமைப்பு இசுலாமிய அரசுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக நம்பப்படுகிறது.இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன இவ்வியக்கத்தை 2019 ஏப்ரல் 27 இல் தடை செய்து, அதனை ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவித்தார்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top