Contact Us

Name

Email *

Message *

தமிழ் இலக்கணம் பற்றிய தகவல்கள்

தமிழ் இலக்கணம் பற்றிய தகவல்கள்


➤  ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள்

  • 1. எழுத்து இலக்கணம்
  • 2. சொல் இலக்கணம்
  • 3. பொருள் இலக்கணம்
  • 4. யாப்பு இலக்கணம்
  • 5. அணி இலக்கணம்


1. எழுத்து இலக்கணம்.
 எழுத்துக்கள் இரண்டு வகை - 2

  • 1. முதல் எழுத்து
  • 2. சார்பெழுத்து


1. முதல் எழுத்து வகைகள் - 2  (1. உயர் எழுத்து, 2. மெய்யெழுத்து)

1. உயர் எழுத்துக்கள் - 12
வகைகள் - 2

  • குறில் எழுத்துக்கள் - 5 (அ,இ,உ,எ,ஒ)
  • நெடில் எழுத்துக்கள் - 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)


2. மெய்யெழுத்து - 18
 வகைகள் - 3

  1. வல்லினம் - 6 (க,ச,ட,த,ப,ற)
  2. மெல்லினம் - 6 (ங,ஞ,ண,ந,ம,ன)
  3. இடையினம் - 6 (ய,ர,ல,வ,ழ,ள)


2. சார்பெழுத்து வகைகள் - 10

  • 1. உயிர்மெய்
  • 2. ஆய்தம்
  • 3. உயிரளபெடை
  • 4. ஒற்றளபெடை
  • 5. குற்றியலுகரம்
  • 6. குற்றியலிகரம்
  • 7. ஐகாரக்குறுக்கம்
  • 8. ஔகாரகுறுக்கம்
  • 9. மகரக்குறுக்கம்
  • 10. ஆய்தகுறுக்கம்


2.சொல் இலக்கணம்:

🐿 ஓர் எழுத்து தனித்து நின்றோ, இரண்டு, மூன்று முதலிய எழுத்துகள் தொடர்ந்து நின்றோ  பொருள் தந்தால் அது - சொல்
🐿 சொல்லை குறிக்கும் வேறு சொற்கள் - மொழி, பதம், கிளவி
🐿 பதம் வகைகள் - 2 (1. பகாப்பதம், 2. பகுபதம்)
1. பகாபதம்:-

🐿 பகுதி, விகுதி என பிரிக்க இயலாத சொல் - பகாப்பதம்

  • 🐿 பகாபதம் வகைகள் - 4
  • 1. பெயர் பகாப்பதம்
  • 2. வினைப் பகாப்பதம்
  • 3. இடைப் பகாப்பதம்
  • 4. உரிப் பகாப்பதம்


2. பகுபதம்:-

🐿 பகுதி, விகுதி என பிரிக்கப்படும் சொல் - பகுபதம்
🐿 பகுபதம் வகைகள் - 2 (1. பெயர்ப் பகுபதம், 2. வினைப் பகுபதம்)
🐿 பெயர்ப் பகுபதம் வகைகள் - 6

  • 1. பொருள் பெயர்ப் பகுபதம்
  • 2. இடப் பெயர்ப் பகுபதம்
  • 3. காலப் பெயர்ப் பகுபதம்
  • 4. சினைப் பெயர்ப் பகுபதம்
  • 5. பண்புப் பெயர்ப் பகுபதம்
  • 6. தொழிற் பெயர்ப் பகுபதம்

🐿 வினைப் பகுபதம் வகைகள் - 2 (1. தெரிநிலை வினைப் பகுபதம், 2. குறிப்பு வினைப் பகுபதம்)
🐿 பகுபதம் உறுப்புகள் - 6

  • 1. பகுதி
  • 2. விகுதி
  • 3. இடைநிலை
  • 4. சந்தி
  • 5. சாரியை
  • 6. விகாரம்

🐿 இடைநிலை வகைகள் - 2 (1. பெயர் இடைநிலை, 2. வினை இடைநிலை)
🐿 பெயர் பகுபதத்தில் வரும் இடைநிலை - பெயர் இடைநிலை
🐿 வினை இடைநிலை வகைகள் - 3

  • 1. இறந்த கால இடைநிலை
  • 2. நிகழ்கால இடைநிலை
  • 3. எதிர்கால இடைநிலை


3.பொருள் இலக்கணம்:-
 பொருள் இலக்கணம் வகைகள் - 2

  • 1. அகப்பொருள்
  • 2. புறப்பொருள்

(1) அகப்பொருள்:

 ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்பம் பற்றி கூறுவது - அகப்பொருள்

அகப்பொருள் உள்ள திணைகள் - 5
இதை 'அன்பின் ஐந்திணை' என்றும் கூறுவர்.
இதில் கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழு எனவும் கூறுவர்
அகத்திணை கூறிய பொருட்கள் - 3

  • 1. முதற் பொருள்
  • 2. கருப்பொருள்
  • 3. உரிப்பொருள்




1. முதற்பொருள்:

  •  முதற்பொருளில் அடங்கி உள்ளவை - நிலமும், பொழுதும்
  •  நிலம் வகைகள் - 5 (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
  •  பொழுது வகைகள் - 2 (சிறுபொழுது, பெரும்பொழுது)

2. கருப்பொருள்:

  •  ஐவை நிலத்திற்கு கூறிய உறுப்பினர்கள்  - 14 (தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை, தொழில்)

3. உரிப்பொருள்:-

  •  குறிஞ்சி - காண்டல் (அல்லது) புணர்தல் நிமித்தமும்
  •  முல்லை - இருத்தலும் இருத்தல் நிமத்தமும்
  •  முருதம் - ஊடலும் ஊடல் நிமுழித்தமும்
  •  நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
  •  பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்


(2) புறப்பொருள்

புறப்பொருள் திணைகள் - 12

  • 1. வெட்சி - பகைவர் பசுக்கூட்டங்களை கவர்தல்.
  • 2. கரந்தை - பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்
  • 3. வஞ்சி - பகைவன் நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.
  • 4. காஞ்சி - பகையெடுத்து வந்த பகைவரை நாட்டில் புகாதவண்ணம் எதிர்சென்று தடுத்தல்.
  • 5. நொச்சி - பகைவர், கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.
  • 6. உழிஞ்சை - பகைவருடைய கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்
  • 7. தும்பை - இரு திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர் புரிதல்.
  • 8. வாகை - பகைவரை வென்றவர் வெற்றயை கொண்டாடுவர்.
  • 9. பாடாண் - ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.
  • 10. பொதுவியல் - வெட்சி முதல் பாடண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.
  • 11. கைக்கிளை - ஒருதலை  ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவரிடத்து மட்டும் தோன்றும் அன்பு. இது 2 வகை ( ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று)
  • 12. பெருந்திணை - பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிட்த்து உண்டாகும் அன்பு


4. யாப்பிலகணம்:-
யாப்பின் உறுப்புகள் மொத்தம் - 6

  • 1. எழுத்து
  • 2. அசை
  • 3. சீர்
  • 4. தளை
  • 5. அடி
  • 6. தொடை

1. எழுத்து:-
 எழுத்து பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தது தான்

2. அசை:-
எழுத்துக்கள் தனித்தோ இணைந்தோ சீருக்கு உறுப்பாகி நிற்பது - அசை
 அசைகள் வகைகள் - 2 (நேரிசை, நிரையசை)

3. சீர்:-
 அசைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ இயைந்து நிற்பது - சீர்
 சீர்கள் எண்ணிக்கை - 30

  • 1. மாச்சீர் - 2
  • 2. விளச்சீர் - 2
  • 3. காய்ச்சீர் - 4
  • 4. கனிச்சீர் - 4
  • 5. பூச்சீர் - 8
  • 6. நிழற்சீர் - 8
  • 7. ஓரசைச்சீர் - 2


4. தளை:-
 சீர் ஒன்றோடொன்று இயைத்து கட்டுப்பட்டு நிற்பது - தளை
 தளை வகைகள் - 4
  • 1. ஆசியத்தளை
  • 2. வெண்டளை
  • 3. கலித்தளை
  • 4. வஞ்சித்தளை


5. அடி:-
 அடி வகைகள் - 5

  • 1. குறளடி - இரண்டு சீர்கள்
  • 2. சிந்தடி - மூன்று சீர்கள்
  • 3. அளவடி - நான்கு சீர்கள்
  • 4. நெடிலடி - ஐந்து சீர்கள்
  • 5. கழிநெடிலடி - ஆறு சீர்கள்


6. தொடை:-
தொடை வகைகள் - 5

  • 1. மோனைத் தொடை
  • 2. எதுகைத் தொடை
  • 3. முரண் தொடை
  • 4. இயைபு தொடை
  • 5. அளபெடைத் தொடை


5. அணி இலக்கணம்:
 அணி என்பதன் பொருள் - அழகு
 அணிகள்  வகைகள் - 2

  • 1. சொல்லணி
  • 2. பொருளணி

சொல்லணி வருபவை - சிலேடை, மடக்கு, யமகம், திரிபு

  •  பொருளணி வருபவை - உவமை, உருவகம்
  • அணிகள் பின்வருமாறு:-
  •  இல்பொருள் உவமையணி
  • ஏகதேச உருவக அணி
  •  பிறிது மொழிதல் அணி
  • வேற்றுமை அணி
  •  வஞ்சிப்புகழ்ச்சி அணி
  •  இரட்டுற மொழிதலணி
  •  சொற்பொருள் பின்வருநிலையணி
  • தற்குறிப்பேற்ற அணி
  • நிரல்நிறை அணி



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Back To Top